நாங்களும் அத்தியாவசிய சேவைகள்தான் செய்கின்றோம்!! வடிவேலு பாணியில் வடக்கு மாகாணசபை! Video
கடும் மழையிலும் ஒப்பீசை திறந்து வைத்து அத்தியாவசிய சேவைகள் செய்ய காத்திருக்கின்றது வடக்கு மாகாணசபையின் தலைமை அலுவலகங்கள். அதுவும் ஆளணி நிர்வாகப் பகுதி, கணக்காய்வுப் பகுதி, நிதிப்பிரிவு உட்பட்ட வடக்கு மாகாணசபை அலுவலர்களுக்காக இயங்கும் பகுதிகளைத் திறந்து வைத்து தமது கடமையுணர்வினை காட்டியுள்ளார்கள் அதிகாரிகள். அத்தியாவசிய சேவைகள் என்பதற்குள் தாங்களது அலுவலகங்களும் அடங்குவதாக நினைத்து அவர்கள் செயற்படுவது வரவேற்கத்தக்கது. ஆனாலும் அதிகாரிகளின் இந்த செயற்பாட்டுக்கு ஆதரவாக ஒரு சில அலுவலர்களே செயற்பட்டு இன்று கடமைக்குச் சென்றுள்ளதாகவும் ஏனைய அலுவலர்கள் குறித்த அதிகாரிகளை வடிவேலுவின் ”நானும் ரவுடிதான்” என்ற கணக்கில் வைத்து செயற்பட்டு அலுவலகத்திற்கு செல்லவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ன.

