புதினங்களின் சங்கமம்

யாழ் அல்லைப்பிட்டியில் கோர விபத்து!! இளைஞன் பலி!! (Photos)

யாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிாிழந்துள்ளாா்.

மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞன் டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிாிழந்துள்ளாா் என தெரியவந்துள்ளது.