புலம்பெயர் தமிழர்

அளந்து பாருங்கள் பார்ப்போம்!! மாவை வேட்டியை மடித்து கட்டினார்!!

வலி வடக்கில் 232 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான
முதற்கட்ட நடவடிக்கையாக இன்று (22) அங்கு அளவீட்டு பணிகள் மேற்கொள்ள
திட்டமிடப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கான ஆரம்ப கட்ட பணிகள்
மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டன. எனினும், இந்த விவகாரத்தை
தமிழ்பக்கம் வெளிச்சமிட்டது.

இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள்
கவனம் செலுத்தினர். “பிரதமருடன் பேசியாயிற்று எல்லாம் முடிந்தது“ என
கூட்டமைப்பு எம்.பிக்கள் தெரிவித்தாலும், அளவீட்டு முன்னாயத்த நடவடிக்கைகள்
தொடர்ந்தன.

இந்த நிலையில், அளவீட்டு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று
மாவை சேனாதிராசா குறிப்பிட்டிருந்தாலும், இன்று மாவை சேனாதிராசாவும்
அளவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணியுடன் நிலைகொண்டுள்ளார்.

காங்கேசன்துறை, கீரிமலையில் இரண்டு இடங்களில் தற்போது பொதுமக்கள்
குவிந்துள்ளனர். அளவீட்டு பணிகள் நடந்தால், எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள்
திட்டமிட்டுள்ளனர். காங்கேசன்துறையில் குவிந்துள்ள மக்களுடன் மாவையும்
நிற்கிறார்.