புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் மாணவர்களுடன் சேர்ந்து மாணவிகளை வேட்டையாடி ருசித்த ஆசிரியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டான்!

முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிசாரால் 2022 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே 2022ம் ஆண்டு  நாம் வெளியிட்டிருந்த பதிவை கீழே தந்துள்ளோம்…

முல்லைத்தீவில் ஆசிரியருடன் இணைந்து மாணவிகளுடன் உடல் உறவு கொண்ட 3 மாணவர்களைத் தேடுகின்றது பொலிஸ்!

 

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் (கணிதபாடம்) ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 18.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

பிரத்தியேக வகுப்பு என்ற பெயரில் வீடுகளில் சென்று கணித பாடம் கற்பித்துவந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக தெரிவான குறித்த சந்தேக நபர், முல்லைத்தீவு நகரில் உள்ள முதன்மை பாடசாலை ஒனறில் ஆசிரியராக நியமனம் பெற்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மாணவ, மாணவிகளின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக கணித பாடம் கற்பித்து வந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 20ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் நண்பனான (18 வயது) கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தான்.

இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அக் காலப்பகுதியில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார், ஆறு மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் குறித்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 2 வருடங்களுக்கு மேலாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்த விசாரணைகளின் முடிவில், அவர் நேற்று முன்தினம் (04) பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.