புதினங்களின் சங்கமம்

லஞ்சம் பெற முயன்ற குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் அதிரடிக் கைது!!

திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ. முபாரக்  இலஞ்ச ஆணை குழுவினால் இன்று (31)  கைது செய்யப்பட்டுள்ளார்.  லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ள்ளார்.  விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.