Home புதினங்களின் சங்கமம் யாழ் சென்ற இரு பிள்ளைகளின் தாயான விமலேஸ்வரியைக் காணவில்லை!!

யாழ் சென்ற இரு பிள்ளைகளின் தாயான விமலேஸ்வரியைக் காணவில்லை!!

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா
காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்பவரை
காணவில்லை என அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கணவரின் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்கு
செல்லுவதாக தெரிவித்து கடந்த 27ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00
மணியளவில் அவரது நண்பியுடன் மோட்டார் சைக்கிளில் வவுனியா பேருந்து
நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அன்றையதினம் மாலையாகியும் அவர் யாழ்ப்பாணம் செல்லவில்லை. அவரது
தொலைபேசியும் துண்டிக்கப்பட்டது. அவரை தேடும் முயற்சியில் பெண்ணின்
உறவினர்கள் ஈடுபட்டிருந்த போதிலும் அது பயனளிக்கவில்லை

அதன் பின்னர் கணவர் 28ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தினை சேர்ந்த பாவடை
அணிந்திருந்தாவும், அவர் தொடர்பான தகவல்களை அறிந்தால் உடனடியாக அருகிலுள்ள
பொலிஸ் நிலையத்திலோ அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி
இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு  பெண்ணின் கணவர்
தெரிவித்துள்ளார்.

தாயை தேடி அவரது இரு பிள்ளைகளும் தினசரி அழுவதாக பெண்ணின் உறவினர் தெரிவித்தார்.