சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் புதிய பொறுப்பதிகாரியின் விசேட உத்தரவு!! போதைப்பொருட்களுடன் 10 பேர் சிக்கினர்!
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பதவியேற்றுள்ள எம்.கோணேஸ்வரனின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரை, மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

