ஒன்டரைக் கோடி ரூபா நட்டம்!! அதனாலேயே தூக்கில் தொங்கிய யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர்!
உலகளாவிய ரீதியில் Crypto பாரிய சரிவை நேற்று சந்தித்திருந்த நிலையில், இதனால் நட்டமடைந்த யாழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வருபவர் என்பதோடு அண்மையில் திருமணம் ஆகியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
வரும் வாரங்களில் சீனாவிலிருந்து வரும் அனைத்து “முக்கியமான மென்பொருட்களுக்கும்” அமெரிக்கா புதிய 100% வரி விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை அறிவித்தார். டிரம்பின் அறிக்கை கிரிப்டோகரன்சிகள் மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் ஒரு பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கிரிப்டோகரன்சிகள் மீது முதலிட்ட பலர் கடும் நட்டம் அடைந்ததாக தகவல் வெளியாகிய நிலையில் குறித்த இளைஞனின் தற்கொலை செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

