Home புதினங்களின் சங்கமம் அநுராதபுரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்ட இளைஞன்! காடு அழிப்பை காட்டி கொடுத்தானாம்!

அநுராதபுரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்ட இளைஞன்! காடு அழிப்பை காட்டி கொடுத்தானாம்!

ஹொரவபொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல குபுகொள்ளாவ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (25) பாழடைந்து கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் ஹொரவபொத்தானை, இஹல குபுகொள்ளாவ பகுதியைச் சேர்ந்த அமர்தீன் முலப்பர் என்பவரின் மகான முலப்பர் சஹ்ரான் (21) என தெரியவந்துள்ளது.

அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டே கிணற்றில் இடப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் பலர், ஏற்கனவே இளைஞனின் வீட்டுக்கு வந்து காணிப் பிரச்சினை தொடர்பில் பயமுறுத்திச் சென்றவர்களே அவரை கொலை செய்திருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.

இருந்த போதிலும், குறிப்பிட்ட சிலர் அரச வனப் பகுதியை சட்டவிரோதமாக துப்புரவு செய்வதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு மரணமடைந்த இளைஞன் தெரியப்படுத்தியதாகவும், இதனையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட கோபத்தின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருப்பதாகவும் உயிரிழந்த இளைஞனுடைய தாய் தந்தை மற்றும் சகோதர, சகோதரிகள், உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த மரணத்திற்கு பிறகு, சந்தேகநபர்களுடைய காணிகளில் பல வருடங்களாக வேலை செய்த இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணையில் அக்கறை காட்டாத நிலையில் இருப்பதாக ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.

ஆயினும் சந்தேகத்திற்கிடமான குறித்த மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஹொரவபொத்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments