புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பேய் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயது பெடியன் சிதறிப் பலி!! பெற்றோரே கொலைகாரர்கள்!! வீடியோ

வவுனியாவில் அதி வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயது பெடியன் சிதறிப்பலியாகியுள்ளான். இவனது மரணத்திற்கு இவ்வாறான மோ்ட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உறவுகளே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறான மோட்டார் சைக்கிள்களை வாங்கிக் கொடுத்து பிள்ளைகளை கொலை செய்வது மட்டுமல்லாது தெருவால் போய் வரும் அப்பாவிப் பயணிகள் மீதும் தற்கொலைத் தாக்குதல்கள்  போல் விபத்துக்களை நடாத்தும் அளவுக்கு இவர்கள் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி

வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில இருந்து நெளுக்குளம் நோக்கி மோட்டர் சைக்கிள் ஒன்றில் 3 இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த மோட்டர் சைக்கிள் இராசேந்திரகுளம் பாடசாலை முன்பாகவுள்ள பஸ் தரிப்பு நிலையத்துன் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குளளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைககிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்கக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் சாம்பல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கோபால்ராஜ் நிலக்சன் என்பவரே உயிரிழந்தவராவார்.

பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

May be an image of 2 people, motorcycle, scooter and textMay be an image of 4 people and treeMay be an image of 3 people, tree and textMay be an image of motorcycleMay be an image of television and text