புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் பேஸ்புக் காதலால் பறிபோன 18 வயது இளைஞனின் உயிர்!

திருகோணமலை-வான்எல பகுதியில் பேஸ்புக் மூலம் யுவதி ஒருவரை காதலித்து வந்த
இளைஞரொருவர் காதலி அனுப்பிய குறுந்தகவல் காரணமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக வான் எல பொலிஸார் தெரிவித்தனர்

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான என். டபிள்யூ. அமில நிரோசன்
என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் பேஸ்புக் மூலமாக நுவரெலியா பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை
காதலித்து வந்துள்ளார்.

இந் நிலையில் யுவதியை எஸ்.எம்.எஸ். குறுந்தகவல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த
நிலையில் நேற்றிரவு குறுந்தகவல் மூலமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞன்
தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் அரச வைத்திய சாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் வான் எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.