புதினங்களின் சங்கமம்

கொழும்பில் முன்னணி பெண்கள் பாடசாலையின் 14 வயது மாணவிகள் 5 பேர் போதைப் பொருட்கள் பாவித்த நிலையில் பிடிபட்டது எப்படி?

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பெண்கள் பாடசாலையின் ஐந்து மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது மருதானை பொலிஸாரிடம் சிக்கினர்.

மாணவிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ந்த்தாகக் கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்  போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த பாடசாலையின் 9 ஆம் வகுப்பு மாணவிகள் பலர் போதைப்பொருள் பயன்படுத்துவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸ்  அதிகாரிகள் குழு பாடசாலைக்குச் சென்றது.

அங்கு அடையாளம் காணப்பட்ட ஐந்து மாணவிகளும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொலிஸ் நிலையத்தில் விசாரித்தபோது, அவர்களில் நான்கு மாணவிகள் தங்கள் வகுப்புச் சேர்ந்த ஒரு தோழி தங்களுக்குப் போதைப்பொருள் கொடுத்ததை வெளிப்படுத்தினர்.

இது குறித்து விசாரித்தபோது, மட்டக்குளிய மல்வத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தான் போதை மாத்திரைகளை வாங்கியதாக மாணவி ஒப்புக்கொண்டார்.