புதினங்களின் சங்கமம்

அம்பலமாகுமா பிள்ளையானின் கொலைகள்!! நெருங்கிய கூட்டாளி கொழும்பில் கைது!!

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி தொடர்பில் ஒருவர் கைது
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு அதிகாரியுமான இனியபாரதி (கந்தையா புஷ்பராஜா) என்பவரின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், இனியபாரதிக்கு உதவியாக பல கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் கப்பம் பெறுதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இனியபாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைது செய்யப்பட்டவர், இனியபாரதியால் நடத்தப்பட்ட பல கொலை சம்பவங்களில் துப்பாக்கிதாரியாக செயல்பட்டுள்ளதாகவும், பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.