புதினங்களின் சங்கமம்

அப்படி எந்த ஒரு சமாதான ஒப்பந்தமும் இல்லை, தொடர்ச்சியாக அடிப்போம் என்கிறது ஈரான்!

இஸ்ரேல் – ஈரான் இடையே 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் ஈரானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் 3ஆம் உலகப் போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இப்போதைக்கு போர் நிறுத்தம், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஒப்பந்தம் இல்லை என ஈரான் மறுத்துள்ளது.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அந்நாட்டின் கவனம் ஈரான் மீது திரும்பியது. ஈரான் தீவிரவாதிகளுக்கு உதவுவதாக கூறி திடீரென கடந்த வாரம் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கடும் கோபமடைந்த ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலும் உள்ளிட்ட நகரங்கள் பலத்த சேதத்தை சந்தித்தது. இரு நாடுகளும் மூர்க்கத்தனமாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் உயிரிழப்புகளும் பொருட்சேதமும் அதிகரித்தது.