பேனா வடிவிலான துப்பாக்கியுடன் பாணந்துறையில் ஒருவர் கைது!
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மொரட்டுவையைச் சேர்ந்த 43 வயதுடையவர்.
பாணந்துறை ஹொரதுட்டுவ பாலத்துக்கு அருகில் நின்றிருந்த சந்தேக நபரின் காற்சட்டைப் பையில் இருந்து வெளிநாட்டில் பயன்படுத்தக் கூடிய பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதற்கான மூன்று தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
இந்தத் துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும், அது செயற்படும் நிலையில் உள்ளது என்றும் கொலைக்கு மிகவும் துல்லியமாகப் பயன்படுத்தக் கூடியது என்றும் கூறப்படுகிறது.

