புதினங்களின் சங்கமம்

பிரதேசசபை உறுப்பினர் பதவிஉனக்குத்தான் என கூறி இளம் குடும்பப் பெண்ணுடன் ஒரேநேரத்தில் 3 பேர் உறவு!! யாழில் சம்பவம்!!

யாழில் தமிழ்த்தேசியக் கட்சி ஒன்றின் பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் ஒரே நேரத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவருடன் இரவிரவாக ஜல்சா செய்து கொண்டிருந்த போது பெண்ணி்ன் கணவரிடம் பிடிபட்ட சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது. கணவர் வீட்டுக்குள் புகுந்ததால் குடும்பப் பெண் மற்றும் 3 கட்சி உறுப்பினர்களும் அங்கிருந்து ஓடித்தப்பியுள்ளனர். போதைக்கு அடிமையான குறித்த பெண்ணின் கணவர் தற்போது 3 பேருடன் ஓடித்தப்பிய தனது மனைவியை கொலை வெறியில் தேடித்திரிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் கடந்த சில தேர்தல்களின் போது தேசியக் கட்சி ஒன்றின் கடுமையான ஆதரவாளராகத் திரிந்த ஒருவர் தற்போது தமிழ்த்தேசியக் கட்சி ஒன்றில் பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். அவரும் அவரது இரு நண்பர்களும் சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அடிக்கடி பார்ட்டி வைப்பதை வழமையாகக் கொண்டிருந்துள்ளனர். குறித்த வீடு வென்ற உறுப்பினரது உறவினரின் வீடு எனவும் குறித்த வீட்டு உரிமையாளர்கள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரியவருகின்றது.
இந் நிலையில் குறித்த வீட்டில் நேற்று முன்தினம் 9 மணியளவில் பெரும் களோபரம் நடந்துள்ளது. நிறை வெறியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வீட்டின் மதில் ஏறிப் பாய்ந்து வீட்டுக் கதவை மோதி உடைத்து வீட்டுக் கண்ணாடிகளை அடித்து நொருக்கி கத்திக் குளறி ஆர்ப்பாட்ம் செய்ததால் அயலில் உள்ளவர்கள் அங்கு கூடியுள்ளார்கள். ஏற்கனவே வென்ற கட்சி உறுப்பினரின் சாராயப் பார்ட்டிகள் அந்த வீட்டில் நடந்து வந்ததால் அயலவர்கள் அவ்வாறான ஒரு பார்ட்டியால் மோதல் ஏற்பட்டுள்ளதாக நினைத்து அவ்விடத்திற்கு சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தள்ளி விழுத்திய பின் குறித்த வீட்டில் இருந்து பிரதேசசபை உறுப்பினர் உட்பட 3 ஆண்களும் பெண் ஒருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஓடித் தப்பினர். பெண்ணு்ம் தனது மோட்டார் சைக்கிளிலேயே தப்பி ஓடியதாகத் தெரியவருகின்றது.

அதன் பின் அங்கு நின்று வீட்டு லைட்கள், ஜன்னல்கள் கதவுகளை அடித்து உடைத்து ஆர்ப்பாட்டம் செய்த குறித்த நபர் தெரிவித்த தகவல்களின்படியே அங்கு நடந்த ஜல்சா தொடர்பாக அயலவர்கள் அறிந்துள்ளார்கள். தப்பியோடிய அந்தப் பெண்ணின் கணவன் என தன்னை கூறி அங்கிருந்தவர்களுக்கு கணவன் தெரிவித்த கருத்துக்களின் படி தனது மனைவி பிரதேசசபை தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சி ஒன்றி்ல் வட்டாரரீதியாகப் போட்டியிடாது விகிதாசார வேட்பாளராக நியமிக்கபட்டிருந்தார் எனவும் தற்போது தனது மனைவிக்கு விகிதாசார உறுப்பிராக பிரதேசசபை உறுப்பினர் பதவி தருவதாக கூறியிருந்தனர் எனவும் அதற்காக கட்சியி உயர்மட்ட கூட்டம் ஒன்று யாழ் நகரப்பகுதியில் நடைபெறப் போகின்றது. அதற்காக செல்வ வேண்டும் என தனது மனைவி கூறி மாலை 6 மணியளவில் சென்றார் எனவும் கணவன் தெரிவித்தார். அதன் பின்னர் இரவு 8 மணியளவில் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் தனது மனைவி கட்சி உறுப்பினர் ஒருவருடன் இந்த வீட்டில் உள்ளார் என யாரோ ஒருவர் தெரிவித்ததால் இங்கு வந்து பார்த்த போது மனைவியின் மோட்டார் சைக்கிள் நின்றதாகவும் அதன் பின்னரே தான் இவ்வாறு செயற்பட்டதாகவும் கூறினார். அதன் பின்னர் அங்கிருந்து சென்ற குறித்த நபர் மனைவியையும் பிரதேசசபை உறுப்பினரையும் கொல்லாமல் விடப் போவதில்லை என சபதம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

இச் சம்பவத்தை அறிந்து குறித்த கட்சியின் அந்தப் பிரதேசசபை உறுப்பினரிடம் இது தொடர்பாக ஊடகவியளாலர் ஒருவர் வினாவிய போது ”அண்ணா…. கும்பிட்டுக் கேட்கிறன்…. நடந்த உண்மையை அறியாமல் ஒரு ஊடகத்துக்கும் அனுப்பாதேங்கோ… வம்பனுக்கு சொல்லாதேங்கோ… புகைப்படங்களோட போட்டு நாறடிச்சுடுவாங்கள் … என்ர மனிசி இது பற்றி அறிந்தால் துாக்கில தொங்கிடுவாள்.. என புலம்பியுள்ளார். அத்துடன் ”கட்சி விகிதாசார உறுப்பினராக அந்த பொம்பிளையை கட்சி போடவுள்ளது என்று நான் அறிந்து தனக்கு பார்ட்டி தரவேண்டும் அந்தப் பெண்ணைக் கேட்டதால் தான் பார்ட்டி வைக்கும் அந்த வீட்டுக்கு வந்து 7 ஆயிரம் ரூபா காசு கொண்டு வந்து தந்துவிட்டு தங்களோட கதைத்துக் கொண்டிருக்க அந்த அறுவான் சரியான வெறியில வந்து தேவையில்லாத பிரச்சனை செய்து போட்டான்…. கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கு மேல் வீட்டை அடிச்சு உடைச்சு நட்டப்படுத்திப் போட்டான்” என அழுது புலம்பியதாகத் தெரியவருகின்றது.

யாழில் ஏற்கனவே தமிழ்த்தேசியக் கட்சிகளில் உள்ள உறுப்பினர்கள் பலர் பாலியல் திருவிளைாயாடல்களில் கில்லாடிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். ஆனால் யாழ்ப்பாணச் சனம் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது அவர்களை வெல்ல வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அரசியல் வாழ்க்கையில் இதுவெல்லம் சகஜம் என அவர்கள் நினைத்திருக்கலாம். அதே நேரம் சுன்னாகம் பிரதேசசபை, மற்றும் கிளிநொச்சி பிரதேசசபைகளின் தவிசாளர்களாக இருந்து ஜல்சா பண்ணிய வேளமாளிகிதன் மற்றும் பிரகாஸ் ஆகியோரும் வலி வடக்கு பிரதேசசபை தவிசாளரான சுகிர்தனும் தற்போது மீண்டும் வென்றுள்ளார்கள். அவர்களின் மனைவிகளும் அதைப்பற்றி பெரிது படுத்தாது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என தற்போது அன்புடன் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றார்கள்.

பிரகாஸ் மற்றும் வேளமாளிகிதன், சுகிர்தன் ஆகியோர் போட்டியிட்டு வென்ற பிரதேசத்து மக்கள் தங்களின் பிரதேசத்திற்கு வெளிச்சம் வருவேண்டும் என்பதற்காக குறித்த உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு விளக்குப் பிடிப்பது போல் ஏனைய பிரதேச மக்களும் செயற்படுவார்களா என்பதை பொறுத்திருத்ததான் பார்க்க வேண்டும்.