புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண பிரதேசசபைகளில் ஊழல், பொம்பிளைச் சேட்டை புரிந்த செயலாளர்கள் தப்பி ஓட்டம்!!

யாழில் பிரதேசசபைகள் மற்றும் நகரசபையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலப்பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு சென்று கேட்டுக் கேள்வியில்லாது தாம் நினைத்தது போல் செயற்பட்ட செயலாளர்கள் தற்போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பெடுக்கவுள்ள நிலையில் அங்கிருந்து அகன்று செல்வதாகத் தெரியவருகின்றது. சாவகச்சேரி நகரசபையில் செயலாளாராக இருந்த சீராளன் பொம்பிளைக் கள்ளாகவும் ஊழல்வாதியாகவும் இருந்துள்ளதுடன் வேறு திணைக்களத்தில் கடமையாற்றிய போது அவனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தும் சாவகச்சேரி நகரசபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தான். அதே போல் பருத்திதுறை பிரதேசசபை செயலாளளர் மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர்கள் மீதும் பொம்பிளைச் சேட்டை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தன. இவ்வாறான நிலையில் தற்போது யாழில் உள்ள பிரதேசசபைகளில் ஒட்டுண்ணிகளாக இருந்து ஏராளமான ஊழல்கள் புரிந்துவந்தவர்கள் தற்போது சபை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அங்கிருந்து வெவ்வேறு அரசநிறுவனங்களுக்கு  இடமாற்றம் பெற்று விலகிச் செல்வதாக தெரியவருகின்றது.