புதினங்களின் சங்கமம்

புலிகள் புதைத்து வைத்திருந்த தங்கம் பற்றிய விபரம் தெரிந்தவருக்கு நடந்த கதி!!

வவுனியாவை சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவரை முல்லைத்தீவில் வைத்து கடத்தி பணம் பெறும்
முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில்
ஒருவர் பிரான்ஸ் குடிமகன்.

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும், அந்த இடத்தை
காண்பிக்குமாறும் தெரிவித்தே வவுனியாவை சேர்ந்த குடும்பத் தலைவர் கடந்த 1ம் திகதி
வாகனமொன்றில் இவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவரை முள்ளிவாய்க்காலில் உள்ள வீடொன்றில் அடைத்து வைத்தனர். பின்னர் சாவகச்சேரியிலுள்ள
வீடொன்றில் அடைத்து வைத்தனர். பின்னர் அவரது மனைவிக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி, பணம்
பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ச.நாகேந்திரன் என்ற குடும்பத் தலைவரே கடத்தப்பட்டிருந்தார். அவரின் மனைவி மேற்கொண்ட
முறைப்பாட்டின் அடிப்படையில், தேடுதல் நடத்திய பொலிசார், நாகேந்திரனை மீட்டனர். அவரை
கடத்திய நால்வரையும் கைது செய்தனர்.

பிரான்சில் வசித்து வரும் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் சிவரஞ்சிதன் என்பவர்
தலைமையிலான குழுவினரே கைதாகியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்
மூவரையும் பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.