புதினங்களின் சங்கமம்

யாழில் பாடசாலை அதிபர் மற்றைய பாடசாலை பெண் உப அதிபர் மற்றும் 2 ஆசிரியைகளுடன் லீலை!!

யாழ் வலிகாமம் கிழக்குப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் அருகில் உள்ள இன்னொரு சிறுவர் பாடசாலையின் உப அதிபராக கடமையாற்றும் பெண் ஒருவருடனும் தனது பாடசாலையைச் சேர்ந்த இரு ஆசிரியைகளுடனும் பாடசாலையிலேயே உடல் உறவில் ஈடுபட்டு வருவதாக சமூகவலைத்தளங்களில் அவர்களது புகைப்படங்களுன் பதிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த அதிபர் அங்கு இவ்வாறான நடத்தையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அப்பாடசாலையில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர் ஒருவர் காவல் இருப்பதாகவும் பதிவுகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விசாரணையில் இறங்கிய போது குறித்த அதிபர் பாடசாலை நாட்களில் சில வேலைளகளில் பாடசாலை முடிவடைந்த பின்னர் பின்னேரம் 5 மணிக்கு பாடசாலையை வி்ட்டு வெளியேறி மீண்டும் இரவு 7 மணிக்கு பாடசாலைக்குள் வந்து தங்கியிருந்து விட்டு இரவு 10 மணிக்கே அங்கிருந்து செல்வதாக அயலவர்கள் அவதானித்து எமக்குத் தெரிவித்துள்ளார்கள். அவர் பாடசாலைக்கு மாலை வேளை செல்லும் போது அங்கு அப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை அல்லது அருகில் உள்ள பாடசாலையில் கடமையாற்றும் உப அதிபரும் சிறிது நேரத்தில் பாடசாலைக்குள் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவ்வேளைகளில் அப்பாடசாலையில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர் ஒருவர் பாடசாலையின் வாயிற்பகுதியில் வந்து நிற்பதையும் தாங்கள் கண்டுள்ளதாக பாடசாலைக்கு அயலில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் பாடசாலைக்குள் சென்ற அதிபரும் ஆசிரியைகளும் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள் என்பது தமக்கு தெரியாது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.