புதினங்களின் சங்கமம்

யாழில் குற்றவாளிகளின் உறைவிடமாகவும் ஐஸ், கஞ்சா உட்பட்ட போதைப் பொருள் கடத்தும் மையமாகவும் விளங்கும் கடல் அட்டைப் பண்ணைகள்!!

யாழில் உள்ள கடல் அட்டைப் பண்ணைகளில் போடப்பட்டிருக்கும் சிறிய குடில்கள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் பாரிய குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் வாழ்விடமாக உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அட்டைப் பண்ணைகளில் அட்டைகள் திருடப்படுவதை தடுப்பதற்காக என அமைக்கப்பட்டிருக்கும் சிறிய குடில்களில் யாழ்ப்பாணத்தில் பிடியாணை பிறப்பிக்கபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளும் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் போன்றவர்களும் மறைந்து வாழ்வதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக பொலிசார் மற்றும் கடற்படையினர் கவனத்தில் எடுத்து குறித்த அட்டைப் பண்ணைகளில் உள்ள குடில்கள் தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . இதே வேளை பொலிசார் சிலருக்கும் இந்த அட்டைப்பண்ணையில் தங்குபவர்களுடன் தொடர்புள்ளது எனவும் தெரியவந்துள்ளது.