போதைப்பொருள் பாவனையாளர்களால் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்படும் மருந்து வகையான Pregabalin என்ற மருந்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு கொப்பற சந்தியில் வைத்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் விநியோக வலையமைப்பு மற்றும் விநியோக வழிகளை கண்டறிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல் இருந்தால், 1997
என்ற எண்ணிற்கு அழைக்கவும்








