யாழ் – கொழும்பு, கொழும்பு காங்கேசன்துறை இரவு தபால் ரெயின் சேவையில் பாரிய ஆபத்து!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
யாழ் – கொழும்பு, கொழும்பு காங்கேசன்துறை இரவு தபால் ரெயின் சேவையில் பாரிய ஆபத்து இடம் பெறும் சில அபாயங்கள் உள்ளன.
சென்ற புதன் இரவு தபால் ரெயினில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரும் போது நடைபெற்ற 02 சம்பவங்கள்.
01. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையத்தில் அந்த நள்ளிரவு 03 மணி போல புகையிரத மேடையின் நீளம் காணாதமை காரணமாக ஒரு மாணவன் மாணவிக்குக் கைலாகு கொடுத்து மிகுந்த அபாயமான கட்டத்தில் இறங்கினார்கள்.
02. நாவற்குழி புகையிரத நிலையத்தில் புகையிரதத்தின் இறுதிப் பெட்டியில் இருந்தவர்கள் புகையிரத மேடையின் இறுதிச் சரிவுப் பகுதியில் இறங்கிய போது ஒருவர் கீழே விழுந்து உருண்டார்.
நல்ல காலமாக தண்டவாளப் பக்கமாக விழவில்லை.
சில வருடங்களுக்கு முன்பாக ஒரு குடும்பம் இறங்கிய போது கணவர் தண்டவாளப் பக்கமாக விழுந்து ரெயின் நசித்து இறந்து போனார்.
இது போன்ற மரண விபத்துகளைத் தவிர்க்க என்ன செய்யலாம்.
பயணியாகிய நீங்கள் இறங்க வேண்டிய புகையிரத நிலையம் வருவதற்கு 20 நிமிடங்கள் முன்பதாக ரெயின் பெட்டிகளின எண்ணிக்கையில் நடுப்பகுதிப் பெட்டிக்குச் செல்லுங்கள்.
அதாவது நீங்கள் பயணிக்கும் ரெயிலில் 20 பெட்டிகள் இருந்தால் 10 வது பெட்டிக்குச் சென்று விடுங்கள்.
இது புகையிரத மேடைக்கு நடுப்பகுதியாக நிச்சயம் இருக்கும். அதன் மூலமாக விபத்துகளைத் தவிர்க்கலாம்.
அன்பு நண்பர்களே
இந்த அபாயம் நாட்டிலுள்ள அனைத்துப் புகையிரத நிலையங்களுக்கும் பொருந்தும். ஆகவே இதனைப் பகிர்வு செய்து பாதுகாப்பான பயணத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
வேதநாயகம் தபேந்திரன்

