வவுனியா இளைஞனின் கேவலமான செயல் வெளியாகியது!!
வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் வைத்து நேற்று மாலை 3.91 கிராம் ஹெரோயினுடன் கைதாகியுள்ளார்.
வவுனியா சிறைச்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி உசாந்த தலைமையிலான குழுவினர் இளைஞனை சோதனை செய்த போது அவரிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வவுனியா – தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மதில் ஊடாக சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கடத்துவதற்காக நின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.