நோர்வேயிலிருந்து யாழ் வந்த ஊத்தை சேது கைது

ஐ.தே.க கட்சியில் கல்வி இராஜாங்க அமைச்சரான விஜயகலாவின் நெருங்கிய சகாவும் பல்வேறு குற்றங்களைப் புரிந்தவனுமான ஊத்தை சேது என்று அழைக்கப்படும் நோர்வேயில் வசிப்பவன் யாழ்ப்பாணத்தில் வைத்து நெல்லியடிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யாழில் விஜயகலாவின் நட்பைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச்செயல்களை நோர்வேயிலிருந்து செய்துவந்தான். போலியான இணையத்தளம் ஒன்றை நடாத்தி வந்ததுடன் அந்த இணையத்தளத்தில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த நேர்மை மிக்க நீதிபதிகள், சட்டத்துறையைச் சேர்ந்தர்கள், ஊடகவியலாளர்களைக் கேவலப்படுத்தி வந்தான். அந்த இணையத்தளத்தில் பலரை அசிங்கமாக எழுவேன் என கூறி பலரிடம் பெருமளவு கப்பத்தையும் பெற்றுவந்திருந்தான். அத்துடன் வருடத்தில் ஒரு தடவை யாழ்ப்பாணத்துக்கு வந்து பெண்கள் பலரது வாழ்க்கையைச் சீரழித்தும் வந்தான். இந் நிலையில் கப்பம் கோரல் சம்மந்தமாக கிளிநொச்சி நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தொடரப்பட்ட வழக்கில் திறந்த பிடியாணை இவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டடிருந்தது.

தனது மகளின் பூப்புனிதநீராட்டு விழாவை யாழ் கொக்குவில் பூநாறிமடம் பகுதியில் அமைந்துள்ள செல்வா திருமண மண்டபத்தில் தனது தலைவியான விஜயகலா தலைமையில் நாளை நடப்பதற்காக யாழில் உள்ள முக்கிய அரசியல்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துக் கொண்டிருந்த போது பொலிசாருக்கு சென்ற இரகசியத் தகவல் காரணமாக இவன் நெல்லியடிப் பொலிசாரால் சற்று முன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.