புதினங்களின் சங்கமம்

டக்கரை கண்ணின் மணி போல் பாதுகாக்கும் ஜே.வி.பி அரசு!! புகைப்படங்கள்!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…..
உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச முன்னாள் தலைவர் அ.எமிலியாம்பிள்ளையைச் சந்தித்து உடல்நலம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கடல்தொழில் நீரியல் அமைச்சருமான டக்ளஸ் கேட்டறிந்தாரென்பது டக்ளஸின் அதிகாரபூர்வ முகநூல் செய்தி.
இந்தச் செய்திக்கான புகைப்படம் இரண்டாவது புகைப்படம் அம்முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், முதலாவது புகைப்படம் உள்பெட்டியில் கிடைக்கப்பட்டது. அதுவும் உள் பெட்டி செய்திக்கேற்ப அடையாளமிடப்படலோடுதான் புகைப்படம் அனுப்பட்டிருந்தது.
உள் பெட்டிக் கேள்வியென்பது //மக்களால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு அல்லது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு MST விசேட பாதுகாப்பு எப்படி வழங்கப்பட முடியும்?//என்பதாக இருந்து விடுகிறது.
தேவையில்லாத அரசு செலவீனங்களைக் கட்டுப்படுத்துகிறோமென்கிற NPP அரசு எவ்வாறு இந்த பாதுகாப்புச் செலவீனத்தை ஏற்றுக் கொள்கிறதென்பதுதான் கேள்வியாகும்.
அதிகார வர்க்கம் அதிகார வர்க்கத்தின் நலன்களிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொள்ளுமென்கிற எதார்த்தத்தைச் செய்தி சொல்லுகிறது.
இன்னாள் யாழ்ப்பாணத்து கடல்தொழில் அமைச்சர் எந்தவொரு அரசாங்க படையின் பாதுகாப்பின்றி மக்கள் சேவையை வழங்க முடியுமென்கிறது அரசியல் படம் காட்டலா என்பது என்னுடைய கேள்வி.
May be an image of 6 peopleMay be an image of 2 people, boat and motorcycle