யாழ்ப்பாண புத்திசாலி அதிகாரிகளே!! “செத்த குஞ்சுமணி கோவணம் தேவையா?“ பொதுமக்கள் கேள்வி?
மரம் ஒன்றை வளர்த்து பாதுகாப்பது என்பது அவசியமான ஒரு செயலாகும். மரங்களைத் தறிக்காமல் விடுவது மட்டும் மரத்துக்கான பாதுகாப்பு அல்ல. மரங்களுக்கான நீர் மற்றும் சத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான ஆதாரங்களை தடுக்காமல் பேணுவதும் மரங்களை பாதுகாப்பவர்களின் முக்கிய பங்காகும். யாழ் மருதனார்மடம் பகுதியில் பிரதேசசபையின் வர்த்தகக் கட்டடத் தொகுதியில் சில மரங்கள் தறிக்கப்படாது கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அந்த மரங்களின் வேர்களுக்கு போதிய நீர் மற்றும் சத்து ஆதாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் வழங்கப்படாது அந்த மரத்தின் வேர்ப் பரப்புக்களை மூடி கொங்கிறீட் இட்டுவிட்டு மரங்களைப் பாதுகாப்பதாக படம் காட்டுவதால் எந்தவித பயனும் இல்லை…..
பட்டுப்போன மரத்திற்கு அருகில் உள்ள கடைக்காரர்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் குறித்த மரத்தைப் பார்த்து கடைக்காரர்களிம் ”செத்த குஞ்சுமணி கோவணம் தேவையா?” என தொடர்ச்சியாக கேள்வி கேட்டு வருகின்றார்களாம்….
இதே வேளை குறித்த பிரதேசசபையி்ன் அதிகாரி ஒருவர் ஊடகச்செயற்பாட்டாளர் ஒருவரிடம் தெரிவித்த கருத்துக்களும் புகைப்படங்களும் இங்ககே தரப்பட்டுள்ளன.
உலகவங்கியின் நிதி ஒதுக்ககீட்டில் குறித்த கட்டடங்கள் கட்டப்பட்ட போது மரங்களை அகற்றாமல் கட்டங்களைக் கட்டுவதே சிறப்பானது என உலகவங்கியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னரே குறித்த கட்டம் கட்டப்பட்டுள்ளது. கட்டடம் கட்டப்பட்ட பின் குறித்த மரங்களால் ஏற்பட்ட இடையூறுகளை அவதானித்து அது தொடர்பாக உலகவங்கி அதிகாரிகளிடம் தெரிவித்த போது அந்த மரங்களுக்குப் பதிலாக வேறு மரங்களை நட்டு வளர்த்த பின்னர் அந்த மரங்களை அகற்றலாம் என உலகவங்கியின் அதிகாரிகள் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே மரங்கள் வேறு இடத்தில் நடப்பட்டுள்ளன. மரங்கள் நடப்பட்டுள்ளதால் இனி பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையூறாக உள்ள அந்த மரங்களை தாம் அகற்றுவோம் என குறித்த அதிகாரி கூறியுள்ளார்.





பிரதேசசபை அதிகாரிகளால் குறித்த மரங்களுக்குப் பதிலாக வேறு மரங்கள் நடப்படும் காட்சிகள்…




