புதினங்களின் சங்கமம்

கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியர் போல் வேடமணிந்து தாதி செய்த விளையாட்டு..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்(colombo national hospital) சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பார்க்க வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகைகளை மோசடி மூலம் அபகரித்த வைத்தியர் வேடமணிந்த தாதியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரியும் பொலன்னறுவையைச் (polonnaruwa)சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் போல் காட்சியளித்த தாதி
தங்க நகையை பறி கொடுத்த பெண்ணின் தாயார் கடந்த ஒரு மாத காலமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் குறித்த பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் நோயாளியை பார்க்க வந்துள்ளனர்.

அதன்போது, ​​நோயாளர்களை பார்வையிடும் வைத்தியர் போல் காட்சியளித்த சந்தேகநபர், முறைப்பாட்டாளரின் தாயின் பதிவுகளை சரிபார்த்து, அவரின் உடல்நிலைக்கு ஏற்ப இரத்தம் வழங்க வேண்டும் என தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.