முல்லைத்தீவு பாடசாலையில் நிதி சேகரிப்பு விவகாரம்…தேசிய கணக்காய்வு நிறுவனம் நடவடிக்கை!!
முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலயத்தில் சில ஆசிரியர்கள் மணிவிழாக்கு தலைமை தாங்கிய ஆசிரியர் அருட்குமரன் தலைமையில் தமது வங்கிக் கணக்குகளில் நிதி சேகரித்த விடயம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்க்கு ஆதாரங்களுடன் முன்வைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்க் கொள்ளப்பட்ட கணக்காய்வு க்கு அமைவாக அதன் தற்போதைய நிலை மற்றும் மேற்க் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வினவப்பட்டதற்க்கு அமைவாக ன, குறித்த தகவல் அறியும் படிவத்திற்க்கான பதிலில்
கணக்காய்வு அலுவலகத்தில் இருந்து கணக்காய்வு ஜயவினா 03 புரட்டாசி 2024 அன்று விசுவமடு மகா வித்தியாலயம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ளது எனவும்
2019 ஆம் ஆண்டு கணக்காய்வு சட்டம் 19 – பந்தி 9 இன் படி கணக்கீட்டு ஜயவினா என்பது எமது படி முறையின் இடைநிலை எனவும் குறித்த திணைக்களத்தில் இருந்து கிடைக்கும் பதில் எமது ஐயங்களை உறுதிசெய்யும் பட்ச்சத்தில் எமது ஆண்டறிக்கையில் பதியப்பட்டு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


