நான் இருந்திருந்தால் அருச்சுனாவை ஓட ஓட கலைத்திருப்பேன்!! டக்கர் கூறுவது என்ன?
2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 திகதி யாழ்ப்பாண கச்சேரியில் நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந்தா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரை டக்ளசின் அடியாட்கள் நையப்புடைத்தனர். போத்தல்கள் மற்றும் பலகைகளால் டக்ளஸ் தரப்பும் கூட்டமைப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடாத்தினர். இத் தாக்குதலில் வடக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த ஐங்கரநேசனின் மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. மாகாணசபை உறுப்பினர் சர்வேஸ்வரன் காயங்களுக்குள்ளானார். கூட்டம் நடந்த மண்டபம் போர்க்களம் போல் காட்சியளித்தது. ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிறை வெறியில் துாசண வார்த்தைகளை கொண்டு ஏசி கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வாறு இருக்க டக்கர் இன்னும் தன்னையும் தனது கட்சியையும் புனிதர்களாக காட்டி ஊடகவியளார்களுக்கு கூறிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. டக்கர் அவர்களே அருச்சுனா என்ற பைத்தியர் கச்சேரியில் செய்த செயற்பாட்டை இங்கு யாரும் நியாயப்படுத்தவில்லை….. ஆனால் நீரும் உமது கட்சி உறுப்பினர்களு்ம் திறமான ஆக்களோ….. முதுகில் புண்ணை வைத்துக் கொண்டு பற்றைக்குள் புக வேண்டாம் டக்கரே….
அத்துடன் உம்மால் உயரதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பல நாதாரிகளே தற்போதும் வடக்கில் கடமை புரிகின்றார்கள்…. அவர்கள் இப்போதும் உம்மைக் கண்டவுடன் லேசாக வாலாட்டுவார்கள்…
அருச்சுனா என்ற பைத்தியர் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பொறுப்பதிகாரியாக இருக்கும் போது நடந்த சம்பவங்களை அடுத்து அந்தப் பைத்தியர் உம்மையே சரண் அடைந்திருந்தான். அந்த நேரம் அந்த பைத்தியருக்கு நீர் சரியான தீர்வு கொடுத்திருந்தால் நீர் இப்போதும் எம்.பியாக சில வேளை இருந்திருக்கலாம்…. நம்பி வந்தவனை நடுத்தெருவில் விட்டுவிட்டு இப்போது அவன் உம்மட குஞ்சைப் பிடிக்கும் போது கத்தக் கூடாது…. அந்த நேரம் அந்த பைத்தியரை தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக இருக்க வைத்திருந்தால் அவன் ஏன் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திற்கு வரப்போகின்றான்….. உசுப்பேத்தி உசுப்பேத்தி நீங்களே ரணகளமாக்கிவிட்டீர்கள்

யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக நான் இருந்திருந்தால் ,அரச அதிகாரிகளை கேலி செய்யும் முகமாக கருத்து தெரிவித்தவரை, சபையில் மன்னிப்பு கோர வைத்திருப்பேன். இல்லையெனில் அவரை சபையில் இருந்து வெளியேற்றி இருப்பேன் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, அண்மையில் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளின் முறை பிழையானது. நடந்து கொண்ட முறையும் பிழையானது. அதனை கூட்டத்தை தலைமை தாங்கியவர்கள் உரிய முறையில் நெறிப்படுத்தவில்லை. அல்லது ஏதாவது உள்நோக்கத்துடன் அவர்களும் அதற்கு துணை போனார்களோ தெரியாது. சிலவேளைகளில் அவர்களுக்கு அனுபவம் இல்லாதமையும் காரணமாக இருக்கலாம்.
இங்கு கல்வி தகமை என்பதனை விட அனுபவமும் மக்கள் நலன் சார்ந்த சிந்தனை உடையவர்களுமே தேவை.
அன்றைக்கு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் ஒரு மூத்த அதிகாரியுடன் பேசிய போது அவர் எனக்கு கூறினார், சேற்றில் குளித்து விட்டு வரும் பன்றியை பார்த்து யானை ஒதுங்கி போனது , பன்றிக்கு பயத்தில் இல்லை. தன் மீது பன்றியின் சேறு பட்டு விடும் என்பதற்காக , அதே போல தான் அன்றைக்கும் நாங்கள் ஒதுங்கி போனோம் என்றார்.
எழுப்பப்பட்ட கேள்வி முறை பிழை என்பதால் தான் அதிகாரிகள் பதில் செல்லவில்லை என மேலும் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்திற்குள் 2014ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி நுழைந்து தாக்குதல் நடாத்திய ஈ.பி.டி.பி குண்டர் குழு புகைப்படங்கள்…



