புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் 60 வயதுக் கிழவிக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரனைக்கு அழைப்பு!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…

திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் வரும் 4ம் திகதி அழைக்கப்பட்டிருக்கின்றார். எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை.போலீசார் செய்ய வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் என்பதை அரசுக்கு சொல்லிக் கொள்கின்றோம்.வழங்கப்பட்டுள்ள அறிவித்தல் தமிழில் உள்ளது ஆனால் இலங்கைப் பொலீசின் அச்சடிக்கப்பட்ட விணப்பத்தில் எங்குமே தமிழ் கிடையாது.
இலங்கையரா வாருங்கள் எனும் காமடியனுகள் அறிய வேண்டியது.தோழர் Arun Hemachandra உங்களுக்கு வாக்களித்தவர்கள், 60 வயதில் அப்படி என்ன பயங்கரவாதத்தை செய்யப் போகின்றார்கள்.

May be an image of studying, blueprint and text

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் – PTA
இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஜேவிபி MP ஆக இருந்தவேளையில் ஏன் இது ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினாரோ அதே காரணங்களைத் தான் நாமும் முன்பிருந்தும், இப்போதும் வலியுறுத்துகிறோம்.
படம் 1 –
ஈராண்டுகளுக்கு முதல் இந்தப் போராட்டத்துக்கு அழைத்தவர் இப்போது இடம்பெற்றுள்ள கைதுகள் பற்றி மௌனமாக இருக்கிறார்.கைதுகளுக்கான காரணங்கள் சட்டத்தில் உள்ள ஏனைய பிரிவுகள், ஊடக அறிக்கையில் காவற்துறை குறிப்பிட்டுள்ள குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்படட்டும்.
ஆனால் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் இடம்பெறும் கைதுகள் ஆபத்தானவை.
அதை நாம் காலாகாலமாக அனுபவித்து வந்திருக்கிறோம்.
படம் 2 – 60 வயது நிரம்பிய அம்மா ஒருவர் திருகோணமலையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
60 வயதான அவர் பயங்கரவாததை எப்படி ஊக்குவித்திருப்பார் என்பதோ அல்லது அவர் சாட்சியாகத் தான் அழைக்கப்பட்டாரோ தெரியவில்லை.
ஆனால், இந்தச் சட்டத்தை ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் எதேச்சாதிகாரத்தோடு பயன்படுத்தினார்கள் என்பதை அறிந்தே JVPயினர் ஆட்சிக்கு வரும்வரை அதை எதிர்த்து வந்தார்கள்.
இதனால் தாமும் எதிர்த்தரப்பில் இருந்தபோது அடக்குமுறைக்குள்ளாகியிருந்தவர்கள் என்பது ஜனாதிபதி அனுர மற்றும் தோழர்களுக்கு நன்றாகவே தெரியும். இப்போது தமது 2/3 நாடாளுமன்ற அதிகாரம் மூலமாக அதை நீக்க முன்வரவேண்டும்.
இல்லாவிடில் அவர்கள் சொன்ன ‘மாற்றம்’ வெறும் தேர்தல் கோஷம் மட்டுமே ஆகும்.
அப்படியே மேடை அரசியல் பேச்சுக்களில் சொல்லப்பட்டு இப்போது யதார்த்த நிலையில் இழுபறிப்படும்13, மாகாண சபை முறை நீக்கம், புதிய அரசியலமைப்பு, விலை குறைப்பு, IMF, நாடாளுமன்ற சலுகைகள் மற்றும் இதர விடயங்களுக்கு ‘அர்த்தமுள்ள’ அவகாசம் எடுத்துக்கொள்ளட்டும்.
நல்லனவாக இருந்தால் வரவேற்போம்.

 

May be an image of 1 person and text