புதினங்களின் சங்கமம்

கொழும்பிலிருந்து யாழ் நோக்க வந்த பஸ் விபத்து!! பெண் பலி! புகைப்படங்கள்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீதியை விட்டு விலகியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மழையுடனான சாலையின் வழுக்கும் நிலைமை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் இதயநோயாளி என்றும், பேருந்து கவிழ்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் பேருந்திலேயே உயிரிழந்ததாகவும் பேருந்தின் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
May be an image of 5 people, road and treeMay be an image of textMay be an image of 6 people and car