புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லுாரில் வீட்டு வாசலில் பாரிய முதலை!! பொலிசார் போட்ட தடத்தை அறுத்தெறிந்து அட்டகாசம்!! வீடியோ

யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று இன்றையதினம் உயிருடன் பிடிபட்டது.

வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.

அப்பகுதியில் முதலை வசிக்ககூடியளவான குளங்கள் இல்லாத போதிலும் குறித்த முதலை எவ்வாறு அங்கு வந்தது என பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதலையைப் பொலிசார் தடக் கயிற்றில் பிடித்து வைத்திருந்த போது தடக்கயிற்றை அறுத்தெறிந்து அட்டகாசம் செய்தது முதலை.