புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் 8 வயது டிலக்சன் பலியானது ஏன்? பெற்றோரே அவதானம்!!

வவுனியாவில் (Vavuniya) எட்டு சிறுவன் ஒருவர் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த  க.டிலக்சன்  என்ற எட்டுவயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் நேற்றையதினம் கிணற்றுப்பகுதிக்கு சென்று தண்ணீர் அள்ள முற்பட்ட போது தவறி கிணற்றின் உள்ளே வீழ்ந்துள்ளார்.இதையடுத்து, உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்ட போதும் அவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.