யாழ் ஊர்காவற்துறையிலிருந்து மாடு கடத்தியவர்களை இரும்பு முள்ளு போட்டு பிடித்த நேவிக்காரன்!!
யாழ் ஊர்காவற்துறையிலிருந்து நேற்று சிறியரக வடிவாகனத்தில் மாடு கடத்திக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்த கள்ளர்கள் பொலிசார் நிறுத்திய போது நிறுத்தாமல் சென்றுள்ளார்கள். இதனையடுத்து அப்பகுதியில் கடமையிலிருந்து கடற்படையினர் வீதியில் இரும்பு முள்ளு றோலை வீசி எறிந்து வாகனத்தை நிறுத்தியுள்ளார்கள். இதனையடுத்து பொலிசாரால் குறித்த கள்ளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

