புதினங்களின் சங்கமம்

பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் கடைசி வட்ஸ்அப் பதிவு!

பதுளை – துன்ஹிந்தவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 41 பேர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (02-11-2024) இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்தவர்களில் 39 பேர் பதுளை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் குறித்த விபத்தில் 23 வயதுடைய 2 பல்கலைக்கழக மாணவிகள் உயிரிழந்துள்ளனர்.

நிவிதிகல, தொலபுகமுவ, பஹல கந்தவில் வசித்த இசுரி உமயங்கனா மற்றும் குருநாகல், ஹுனுபொலகெதர, அம்பகொட்டே பகுதியில் வசித்து வந்த பூபதி ஹெட்டிமுல்ல ஆகிய இரு மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இவ்வாறான நிலையில், விபத்தில் உயிரிழந்த மாணவிகளில் ஒருவரான இசுரி உமயங்கனா, நேற்று (01) தனது தந்தையின் பிறந்த நாளுக்கு வாட்ஸ்அப்பில் வாழ்த்துச் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதிகாலையில் எழுந்த நிலையில், 05.03 மணிக்கு வட்ஸ்அப்பில் அப்பாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்த இரு மாணவிகளின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.