புதினங்களின் சங்கமம்

நள்ளிரவில் வீடு புகுந்து ஆண்களை கட்டி வைத்து பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கும் கொள்ளையர்கள்!! பொலிசார் கூறும் அதிர்ச்சித் தகவகள் இதோ!!

நாட்டின் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, வீடுகளில் பொருட்களை திருடி வந்த இரண்டு திருடர்கள் தொடர்பான மேலும் பல தகவல்களை பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூதாட்டி ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்களை பலாத்காரம் செய்து வீடுகளில் பொருட்களை திருடும் திருடர்கள் கும்பல் ஒன்று தொம்பே, வெலிவேரிய மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிவதாக அத தெரண கடந்த சனிக்கிழமை (12) வெளிப்படுத்தியது.

இதன்படி, விரிவான விசாரணைகளை மேற்கொண்ட மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், 6 நாட்களாக முன்னெடுத்த நடவடிக்கையின் பின்னர் குறித்த இருவரையும் கடந்த 16ஆம் திகதி அதிகாலை கைது செய்தனர்.

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்ற போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ,

“இதற்கு ஒரு ஆண் மட்டுமே இருக்கும் வீடுகளை தேர்வு செய்கிறார்கள்.. பெரிய காணியில் தனி வீடாக இருக்கும் வீடுகளையும் தேர்வு செய்கிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அங்கு வசிப்பவர்களின் ஆடைகளை அகற்றி சந்தேகநபர்கள் நிர்வாணமாக்குகின்றனர். . பின்னர் குடியிருப்பாளர்களுக்கு முன்னால் வைத்து பெண்களை பலாத்காரம் செய்கின்றனர். கணவன் அல்லது தந்தை, சகோதரர்களுக்கு முன் பெண்களை வல்லுறவு செய்கின்றனர். நள்ளிரவில் ஆழ்ந்தநித்திரையில் இருக்கும் போது வீடுகளுக்குள் புகும் இக் கொள்ளையர்கள் ஆண்களை நித்திரையில் வைத்தே அழுத்திப் பிடித்து கை,கால்களை கட்டுகின்றார்கள். திமிரும் ஆண்கள் மீது தாம் கொண்டு வரும் ஆயுதங்களால் தாக்கி அவர்களை காயப்படுத்தி நிர்வாணமாக்கி கைகால்களை கட்டிய பின்னர் அங்கு குடியிருக்கும் இளம் பெண்கள் அல்லது குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கி ஆண்களின் முன்னால் வைத்தே அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குகின்றார்கள். பின்னர் வீடு முழுவதும் சல்லடை போட்டும் குடியிருப்பவர்களை தாக்கியும் அவர்களது பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்க கொள்ளையடித்து செல்கின்றார்கள். மிகவும் சர்வசாதாரணமாக இவர்கள் சமூகத்தில் பகல் வேளையில் நடமாடித் திரிந்து வீடுகளை இலக்கு வைத்து புகுந்து செயற்படுகின்றார்கள் என பொலிசார் கூறுகின்றார்கள்.

3 மாதக் குழந்தையின் தாயை நிர்வாணமாக்கி வல்லுறவுக்கு உள்ளாக்க முற்பட்ட போது கணவன் சிறு குழந்தையின் தாய் என கெஞ்சிசும் கேட்காது தாயை வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.

வெலிவேரிய மற்றும் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமன்றி, கிரியெல்ல மற்றும் எஹெலியகொட பொலிஸ் பிரிவுகளிலும் இதுபோன்ற குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x