யாழ் ஆளுநர் செயலக கணக்காளர் கலைச்செல்வன் பிருத்தானியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்!!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணக்காளர் அண்ணாமலை கலைச்செல்வன் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நிதி கணக்கீட்டு முகாமைத்துவ கற்கையில் கலாநிதி பட்டத்தை பூர்த்திசெய்து யாழ்ப்பாண மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கணக்காளர் சேவையில்
வடமாகாண ஆளுநர் செயலகம், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதான கணக்காளராக பணியாற்றும் இவருக்கான பட்டமளிப்பு எதிர்வரும் 30ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றிய கலைச்செல்வன், கணக்காளர் சேவையில் சித்தியடைந்து கணக்காளராக சேவையில் தன்னை இனைத்துக்கொண்டார்.
பின்னர் அவ் சேவையில்
இருந்து கொண்டு சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற லண்டன் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றமை அரச சேவையில் இருப்பவர்களுக்கு முன்னுதாரணமாகும்.
தற்போது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் பிரதம கணக்காளராக செயல்படுவதுடன் வடமாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் என்பவற்றிலும் கணக்காளராக சேவையில் ஈடுபட்டுள்ளார்.

