புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டியை மீட்கும் பணி தீவிரம்!! வீடியோ

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட செம்மலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட புளிய முனை கிராமத்தில் உள்ள கிணற்றில் வீழ்த  யானைக்குட்டியை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 காட்டுயானைக்குட்டி ஒன்று விழுந்திருந்ததை  கண்ட மக்கள் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியிருந்தனர்

இந்நிலையில் குறித்த யானைக்குட்டியினை மீட்கும் பணியில் கிராம அலுவலர், கிராம மக்கள் இணைந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கி அவர்களது உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.