யாழில்.பேக்கரிக்கு சீல் வைக்கப்பட்டது!!
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , அதன் உரிமையாளருக்கு 24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் போது வெதுப்பகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டதை அடுத்து , உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, வெதுப்பகத்தில் காணப்பட்ட சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் வெதுப்பகத்தினை சீல் வைக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளையிட்ட மன்று , வெதுப்பக உரிமையாளருக்கு 24ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.