புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் நீதிமன்ற மலசலகூட கூரையை பிரித்து ஓடிய சிறைக் கைதியான கிளிநொச்சி கில்லாடி!!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் நீதிமன்றத்தின் கழிவறை கூரையை உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ள சம்பவம் நேற்று (26) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர் .ஏறாவூர் நீதிமன்ற வழக்கொன்றில் நான்கு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியை சேர்ந்த 30 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

வேறொரு வழக்கொன்றிற்காக களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற கைதி கழிவறை கூரையை உடைத்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர் .