யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து நசித்து இயக்கச்சிப் பகுதியில் ஒருவர் பலி!!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், இயக்கச்சி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் மதுபோதையில் நடந்து சென்ற நபர் , வீதியின் குறுக்கே வந்து பேருந்தினை வழிமறித்துள்ளார். வீதியை விட்டு விலகுமாறு , சாரதியும் நடத்துனரும் பேசி விட்டு , பேருந்தினை எடுத்த போது , மீள அவர் பேருந்தின் குறுக்கே பாய்ந்த நிலையில், பேருந்தின் சில்லுக்குள் அகப்பட்டு சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.