நாயையும், குட்டிகளையும் விழுங்கிய மலைப்பாம்பு – இலங்கையில் சம்பவம்!! Video
மாகந்துர ஜனஉதாகம கிராமத்தில் வீடொன்றில் இருந்த நாய் மற்றும் நான்கு நாய்க்குட்டிகளை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது.
நேற்று (01) பிற்பகல், வீட்டின் கொட்டகையில் மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் இருப்பதை குடியிருப்பாளர்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த கொட்டகையில் நாய் ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ள நிலையில், குறித்த நாயையும் அதன் நான்கு ஒரு மாத குட்டிகளையும் மலைப்பாம்பு விழுங்கியமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெலிகம பெலன பகுதியில் பாம்பு பிடிக்கும் இளைஞர் ஒருவர் வந்து குறித்த மலைப்பாம்பை பத்திரமாக எடுத்து சென்று பாதுகாப்பான பகுதிக்கு விட நடவடிக்கை எடுத்துள்ளார்.