பிரான்சில் காப்புறுதிப் பணம் பெறுவதற்காக தாங்கள் கற்பழிக்கப்பட்டதாக இலங்கையில் யுவதிகள் செய்த திருவிளையாடல்கள்!!
பிரான்ஸில் இலங்கைக்கு சுற்றுலா வந்த இரண்டு பெண்கள், காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ள போலியான நாடகம் மேற்கொண்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அனுராதபுரத்தில் வீதியில் நபர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
எனினும் அவர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அப்படியொரு சம்பவம் இடம்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்க சேட்டை
வீதியால் சென்ற போது எதிரே வந்த நபர் அங்க சேட்டையில் ஈடுபட்டதாகவும், அதிலிருந்து தப்பித்துக்க முயற்சித்த வேளையில் சைக்கிளில் இருந்து வீழ்ந்து காயம் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் காப்புறுதி பணம் பெறுவதற்காக இவ்வாறான முறைப்பாடுகள் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.