புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் பெண் வேடமிட்டு தாய் மற்றும் மகள் மீது குடும்பஸ்தர் கொடூரத் தாக்குதல் நடாத்தியது ஏன்?

ஹபாயா அணிந்து பெண் வேடமிட்டு தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் தாய் மற்றும் மகளை கத்தியால் தாக்கிவிட்டு, தப்பிக்க முயன்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மூதூரை பிறப்பிடமாகவும் ஈச்ச நகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வரும் 38 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த தாய் (வயது 54) மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும் மகள் (வயது 31) கந்தளாய் தள வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்திக்குத்துக்குள்ளான தாயிடம் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் கடனுக்கு பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொடுத்த பணத்தை மீளப் பெறுவதற்காக தாக்குதல் தாரியின் கையடக்க தொலைபேசி திருத்தும் கடைக்கு கத்திக்குள்ளான தாய் சென்று கேட்டுள்ளார்.

அதன் பின்னரே சந்தேக நபர் அத்தாயின் வீட்டுக்குச் சென்று கத்திக் குத்து தாக்குதலை நடத்தியுள்ளார். தாக்கிய நபர், அங்கிருந்த தப்பிச் செல்வதற்காக முகத்தை மூடி ஹபாயா அணிந்து வெளியே செல்ல முயற்சித் வேளையில் கைது செய்ப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் , சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாமம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x