சினிமா

விஷால் -அனிஷா நிச்சயதார்த்தம்…!! வெளியான அதிர்ச்சி செய்தி(Photos)

தமிழ் திரையுலகில் வெகு நாளாக சிங்கிளாக சுற்றித் திரியும் தில்லான பிரபலங்களில் விஷாலும் ஒருவர்.அடிக்கடி சினிமா செய்திகளில் கேக்கப்படும் கேள்வி ’விஷால் நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள்’ என்பதுதான்.அவரும் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்த பின்பே அவர் திருமணம் செய்துகொள்ளபோவதாக சில பேட்டிகளிலும் கூறியிருந்தார்.

உண்மையாகவே விஷால் திருமணம் செய்து கொள்ள மாட்டாரா? என பலர் கேள்வி எழுப்ப நிலையில்,திடீரென தெலுங்கு நடிகையான அனிஷா அல்லாவை காதலிப்பதாக ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக விஷால் அறிவித்தார்.ஒரு வழியாக விஷாலும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டார் என ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.

ஆர்யாவின் திருமணம் முடிந்து சில தினங்களே ஆன நிலையில், தற்போது விஷாலின் நிச்சயதார்த்தம் இன்று ஹைதரபாத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்து முடிந்துள்ளது.இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த மனோ பாலா, குஷ்பு ,சுந்தர்.சி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களின் திருமண தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.

இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.