இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

சாரைப்பாம்பை கறிவைத்து சாப்பிட்டு காணொளி வெளியிட்ட தமிழ்க் காவாலி கைது!!

சாரைப்பாம்பு கொன்று அதனை சமைத்து சாப்பிட்டு காணொளி வெளியிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பில், திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாம்பின் தோலை உரித்து, தண்ணீரில் அலசும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் குறித்த நபர் வெளியிட்டுள்ளார். அக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து அவர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து பாம்புக்கறி சாப்பிட்டவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

May be an image of 2 people