ஞானசார தேரரை தேடிச் சென்ற விசேட பொலீஸ் குழு அந்த விகாரையின் பின்பகுதி காணியில் சிறிய புதர்கள் வளர்ந்து இருந்த இரண்டு தியான கொட்டில்களில் ஒவ்வொன்றாக தாண்டி செல்ல முற்பட்டபோது சிறிய பற்றைக்காடுகளுடன் கூடிய அட்டைகள் நிறைந்த அட்டைகள் கடிக்க மிகுந்த சிரமத்துடன் இப்பகுதியில் தனிமையில் அமைந்திருந்த இன்னும் ஒரு தியான கொட்டிலைப் பரீட்சிக்க சென்ற போது அங்கு ஞானசார தேரர் மேலங்கி இன்றி காணப்பட்டதாக குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை பிரிவு மூலம் கிடைத்துள்ள செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இதே வேளை இந்த விகாரையில்மறைவதற்காக இவர் இங்கு வருகை தந்த போது வழியில் இடத்துக்கு இடம் கள்ளன் போலீஸ்விளையாட்டு போல மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மாறி மாறி பயணம் செய்து வந்துள்ளார்
இதேவேளை இந்த செயற்பாடுகளுக்கு உதவி வழங்கிய 6 பேரிடம்வாக்குமூலம் பெறப்பட்டு இவர்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட உள்ளதாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இவர் பயன்படுத்திய வழமையான தொலைபேசி சிம்கள் மாற்றப்பட்டு புதிய சிம்அட்டையும்இலக்கமும்இருந்ததாகவும் விசாரணைகள்மூலம் தெரிய வந்துள்ளதாகபுலனாய்வு தகவல்கள் கூறுகின்றன





