கட்டுநாயக்க விமான நிலையத்தில் 16 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் கைப்பற்றல்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலங்கை பயணி ஒருவர் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்ற இரத்தினக் கற்களை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் UL 127 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு செல்ல வந்த குறித்த பயணியின் பயணப் பொதியில் இருந்து 482.02 கிராம் எடையுள்ள பல்வேறு வகையான மாணிக்கக் கற்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இவை எக்ஸ்ரே இயந்திரங்களில் சிக்காமல் இருக்க கார்பன் தாள்களில் சுற்றி கொண்டு வந்துள்ளார். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாணிக்கக் கற்களின் பெறுமதி 16 இலட்சம் ரூபா என சுங்கத் திணைக்களத்தினால் மதிப்பிட்டுள்ளது.

