புதினங்களின் சங்கமம்

யாழ் தம்பசிட்டியில் மச்சானின் கையை வெட்டி எடுத்துச் சென்ற இறைச்சிக்கடைக்காரனுக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் இளைஞன் ஒருவரின் கை துண்டாடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பசிட்டி பகுதியில் கடந்த 31ஆம் திகதி இரவு, இளைஞன் ஒருவரின் கை துண்டாடப்பட்டிருந்தது.

காயமடைந்த இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது மைத்துனர், மைத்துனரின் தந்தை, நண்பர் சந்தேகநபர்களாக தேடப்பட்டனர்.

மைத்துனர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் தலைமறைவாக இருந்தனர்.

இந்த நிலையில், காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகரின் கீழியங்கும் விசேட பிரிவினரால், மைத்துனரின் தந்தை கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கைதானவர் குற்றத்தில் சம்பந்தப்படவில்லையென்றும், சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டுமென கேட்டார்.

எனினும், பிணைக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பருத்தித்துறையிலுள்ள இறைச்சிக்கடையொன்றில் பணியாற்றுபவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.