யாழ் போதனா வைத்தியசாலையில் பரபரப்பு!! கனுலா கழன்று அதிகளவு இரத்தம் வெளியேறி தினேஸ் பலி!!
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் – தலையாழி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் தினேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட தீர்மானித்துள்ளனர்.
இதன்போதே, இன்றையதினம் (22-03-2024) மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிகளவு மது பாவனையால் நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்ட நிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

